ஒருபுறம் அரசியல் பரபரப்பில் விஜய் ரசிகர்கள் கணக்குகள் போட்டுக்கொண்டிருக்க இலியானாவுடன் நண்பன் படத்தில் காதல் காட்சிகளை நடித்து முடித்திருக்கிறார் விஜய். ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் படம் நண்பன். இந்தப் படத்தின் ஷூட்டிங் தெஹ்ராடூனில் நடந்தது.
தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் நாட்டுப் பக்கமே தலை வைக்காமல் இருந்து வந்தார் இலியானா. அவர் நடித்த முதல் படமான கேடி படத்தின் தோல்வி தான் காரணம். தெலுங்கு சினிமாவில் உயரப் பறந்துவந்த இலியானாவை விஜய் உட்பட பலரும் தமிழுக்கு கொண்டுவர முயற்சித்தனர். அம்மணி அசரவில்லை. ஆனால் நண்பன் படம் ஷங்கர் படம் என்பதால் உடனே தலையாட்டி விட்டார் இலியானா.
முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள இலியானா தனது டுவிட்டர் இணையதளத்தில்... விஜய்யுடன் என் முதல் காட்சியை நடித்து முடித்தேன். நான் எதிர் பார்த்த மாதிரி விஜய் இல்லை. அவர் மிகவும் நல்ல மனிதர். அமைதியாக இருந்தாலும் கொஞ்சம் குறும்பானவரும் கூட. அவருடன் நடிப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment