Sunday, April 3, 2011

தென்னிந்தியாவில் ர‌ஜினி, கமலுக்கு அடுத்து விஜய்


தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ர‌ஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் அதிக சம்பளம் வாங்குது விஜய் 
அடுத்த இடத்தில் இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இவரது சம்பளம் முந்தைய படம் வரை ஏழு கோடி. இப்போது ஒன்பது கோடிகள். இவருக்கு அடுத்த இடத்தில் ரவி தேஜா. ஏழு கோடிகள் வாங்குகிறார். மகேஷ்பாபுவின் படங்கள் தொடர்ந்து ச‌ரியாகப் போகாததால் ஆறு கோடிக்கு சம்பளம் கீழிறங்கியுள்ளது. அல்லு அர்ஜுன் போன்ற சுமாரான ரசிகர்கள் உள்ள ஹீரோக்களே தெலுங்கில் ஐந்து கோடி சம்பளம் வாங்குவது மற்ற மொழி நடிகர்களுக்கு பொறாமை வரவைக்கும் செய்தி.
தெலுங்கில் படம் இயக்கவும், நடிக்கவும் நம்மாட்கள் ஆசைப்படுவதற்கு காரணம் இந்தியாவிலேயே தெலுங்கில்தான் சம்பளம் அதிகம்.
மம்முட்டியும் மோகன்லாலும் இப்போதும் ஒன்றரை கோடியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment