Monday, April 11, 2011

மீண்டும் விஜய் - அனுஷ்கா ஜோடி!

நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் வேலைகள் சூடு பிடித்து வருகின்றன மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில்.

பொன்னியின் செல்வனை முதலில் மூன்று மணி நேரப்படமாக உருவாக்க நினைத்த மணிரத்னம்,

இப்போது மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதேநேரம் மூன்று பாகத்துக்குமான படப்பிடிப்பை ஒரேநேரத்தில் நடத்தி முடிக்க இருக்கிறார். விஜய், ஆர்யா, மகேஷ் பாபு ஆகிய மூன்று பேருக்கும் தலா ஒரு நாயகி வீதம் மூன்று கதாநாயகிகள் படத்தில் இடம்றுகிறார்கள்.

வேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து விஜய்- அனுஷ்கா இருவரும் பொன்னியின் செல்வன் படத்துக்காக மீண்டும் ஜோடி சேர இருக்கிறார்களாம். அனுஷ்கா குந்தவை கதாபாத்திரத்துக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது.

இப்போதைக்கு விஜய் ஏற்கப்போகும் காதாபாத்திரம் எது என்று தெரியவில்லை. ஆனால் சத்தியராஜ் பழவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். மகேஷ் பாபு அருண்மொழிவர்மானகவும், ஆர்யா ஆதித்த கரிகாலனாகவும் நடிக்க இருப்பதாக வெளியான செய்திகளை மறுக்கிறார்கள்.

இப்போதைக்கு யாருக்கு எந்த கேஸ்ட் சரியாக இருக்கும் என்பதை வசந்த டெஸ்ட் சூட் செய்து மணிரத்தினத்துக்கு சொல்ல இருக்கிறாராம். டெஸ் சூட்டை ரெட் ஒன் கேமராவில் படம் பிடிக்க இருக்கிறார்களாம்

No comments:

Post a Comment