Monday, April 11, 2011

நடிகர் விஜய் அவர்கள் கவனத்திற்கு!!


தமிழன் என்ற காரணத்தால் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரைப்பட நடிகர் விஜய் அவர்கட்கு இந்த ஈழத்தமிழனின் வணக்கங்கள் ,நான் ஒரு தமிழன் இதைவிட என்னை அடையாளப்படுத்த எனக்கு-தெரியவில்லை மேலும் நான் ஒரு எழுத்தாளரோ அல்லது தமிழைக்கரைத்து குடித்த ஒரு அறிவாளனோஇல்லை அடக்குமுறையிலும் அரசியல் சதிகளிலும் அகப்பட்டு அவலப்பட்ட ஒரு அனுபவசாலி உதாரணமக வெம்பிப்பழுத்த பழம் என்று சொல்லாலாம். வெம்பிய பழமாக இருந்தாலும் அது சிலநேரங்களில் பசியைப்போக்க உதவும் எனவே விடுதலைப்பசியினை போக்கிட என் தேசத்துக்கு என்னால் இயன்றதை செய்வேன் செய்கின்றேன் இதன் அடிப்படையில் உங்களுக்கு இந்தமடலினை வரைகின்றேன் நான் உங்கள் எதிரியோ அல்லது  அரசியல் கட்சிகள் சார்ந்தவனோ இல்லை இதில் தவறுகள் ஏதும் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும் .
மேலும் உங்கள் நடிப்பில் முதலில் வெளியான நாளையதீர்ப்பு முதல் இறுதியாக வெளிவந்த காவலன் வரைஅனைத்து திரைப்படங்களையும் பார்த்தேன் நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் ஒப்புகெள்கின்றேன் மேலும் மேலும் நீங்கள் வளர்ச்சியடைய இறைவனை வேண்டுகின்றேன்  .
உங்கள் பெயரை நெஞ்சில் பைச்சைகுத்தி புதிதாக உங்கள் படம் வெளிவந்தால் உங்கள் உருவபெம்மைக்குதீபராதைனைகள் காட்டி கொண்டாட்டம் நடக்கிறது கேட்டால் விஜய் ரசிகர் என்கிறனர் இதையெல்லாம் செய்பவர்வீடுகளில் குடிக்கக்கூடத்தண்ணீர் இல்லை இந்த உன்மை உங்களுக்கும் தெரிந்தவிடயம் ,காந்தியின் சிலைதான்காக்கைகழுக்கு கழிவறை அண்ணாவின் சிலையோரம் சிலந்திக்கூடுகள் ஏராளம் சினிமாக்கெட்டகையில் உங்கள்நிழற்படங்கள் மட்டும் மலர்மலை சுமக்கிறது இதில் உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது???
கண்ணகி சிலையைக்கடலோரம் வைத்துவிட்டு குஸ்புவுக்கு கோவில்கட்டிகொன்டாடிய இந்த தேசம் எப்போதுவிடியும் என்று என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா???? இளையதளபதி என்ற பட்டம் யார் தந்தது ??? எந்தப்படைக்கு நீங்கள் தளபதி தெரியுமா ???( மன்னிக்கவும் ) செந்தமிழைச்சிறைப்பிடிக்கும் ஒரு சில சினிமாபைத்தியப்-படைகழுக்கு, உங்களை சிறந்ததமிழன் என்று ஒருசிலர் செல்லி பெருமிக்கின்றனர் தமிழன் யார் சிறந்ததமிழன்???தன் இனம் அழியும்போது யாரெல்லாம் ஓடிவந்து குரல்கொடுத்து காப்பாற்றமுடியாமல் போனாலும்  கதறி அழுது கண்ணீர் வடித்தாரோ அவர்கள் எல்லாம்  சிறந்ததமிழன்,    .நீங்கள் ????
இன்று நெருப்பின் மறுசொல் என்றால்  முத்துக்குமார் என்ற பெயர்தான் முதல்வரும் இவன் சிறந்ததமிழன்இவன் மரணிக்கும்வரை இவனை யார் என்றே எமக்கு தெரியாது எந்தரசிகர் மன்றமும் இவனுக்கு கிடையாதுமரணத்தில் மாவீரம் செய்துவிட்ட இந்த வீரனின் மான உணர்வு எவனுக்கெல்லாம் இருக்கிறதோ அவன் எல்லாம்தமிழன்.இது உங்களுக்கு இதுவைரையில் இருந்ததாக எனக்க்குத்தெரியவில்லை ஒருவேளை இப்போது வந்திருக்கலாம்ஆனாலும் அது சுயநலமாகக்கூட இருக்குமா என்ற ஐய்யப்படு எங்கள் மனதில் இருக்கிறது
அண்மையில் பத்திரிக்கையில் பார்த்தேன் நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் ஒன்று செய்ய உள்ளாரம்  அதுவும் இலங்கைஅரசைக்கண்டித்து ,நண்பன் ஒருவன் சொன்னான் ( இவரும் அரசியலுக்கு வரப்போகின்றார் போல ) உன்மைதான் தமிழகத்தின் அரசியலே ஈழத்தமிழனை பகடைக்காய்களாகவைத்தே என்பது மறுக்க முடியாத உன்மைஅதனால் யாரை நம்புவது எனறே எங்களுக்குத்தெரியவில்லை,  எங்கள் இரத்தக்கறைகளைத்துடைப்பதாய் கூறிவிட்டுமீதமுள்ள உதிரங்களையும் உறிஞ்சிக்குடிக்கும் மூட்டைப்பூச்சி மனிதர்கள் தான் தமிழகத்தில் அதிகம்
தமிழகத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்த ஒரே தமிழன் என்றால்  அய்யா பழநெடுமாறன் அவர்கள்தான் சுயநலமற்றவர் அன்று முதல் இன்றுவரை தமிழினத்தின் விடுதலைக்காய் ஓய்வின்றி உழைக்கின்ற ஒரு சிறந்த விடுதலைப்போராளி இவர் வெளியில் இருந்த நாட்களை விட சிறையில் இருந்த நாட்கள்தான் அதிகம் என நினைக்கின்றேன்  ஆடம்பர வாழ்கையற்ற உன்மையான தமிழ்மகன்  இவருக்கும் ரசிகர் மன்றமோ அல்லது வீரன் மாவீரன் என்ற பட்டங்களோ கிடையாது அப்படி இருந்திருந்தால் தமிழினம் ஓரளவாயினும் அழிவில் இருந்து மீண்டிருக்கும்
தமிழில் பெயர்வைத்தால் விசேட சலுகையாம்  காவலன் என்ற தலைப்புக்குள் இருக்கினற கேவலங்களை யார் அறிவார் அன்றய திரைப்படங்கள் தமிழையும் தமிழர் கலாச்சாரங்களையும் வளச்சிபெறச்செய்யும் நோக்குடன் எடுக்கப்பட்டன நடமுறை வழ்க்கைக்கு அவசியமான கருத்துக்களை தாங்கி நினறன .ஆனால் இன்றைய திரைப்படங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சம்கூட ஒவ்வாத கதைகள்  தமிழைக்கெலைசெய்யும் சிறந்த ஆயுதம் இந்தச்சினிமா இதற்குத்துனைபோவது உங்களைப்போன்ற நடிகர்கள் என்றாவது இதைப்பற்றி நீங்கள் சிந்ததுண்டா?? இருக்காது சிந்தித்திருந்தால் இன்று உங்கள் வங்கிக்கணக்கு காலியாக இருந்திருக்கும்
நடிகர் விஜய் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி?   இலங்கைக்கடற்படையின் கொடூழுயத்தால் சுட்டுக்கொள்ளப்படும் இந்திய மீனவனின் தொகை அய்நூற்றை தாண்டிவிட்டது தமிழக அரசை பொறுத்தவரை  ஒருமீனவன் கொல்லப்பட்டான் அதற்கான செலவு ஒரு பேனாவும் ஒற்றையும் உடனே ஒரு கடிதம் அத்துடன் எல்லாம் முடிந்துவிடும் ,இது வரையில் வெளிவராத உங்கள் குரல் இன்று மட்டும் வெளிவரக்காரணம் என்ன?? இவளவுகாலமும் எங்கே போயிருந்தீர்கள்??
( இனி ஒரு மீனவனை இலங்கை இரானுவம் கொலைசெய்தால் உலக வரைபடத்தில் இலங்கை என்று ஒரு நாடு இருக்காது ) நல்ல வீரம் செறிந்த வசனம் ஆனாலும் இந்தத்திடீர் ஞானம் எங்கிருந்து வந்தது??? முள்ளிவய்க்காலில் எங்கள் செந்தங்கள் அவலப்பட்டபோது நீங்கள் வீதியில் இறங்கியிருந்தால் உங்கள் பின்னால் இளைய தலைமுறை தொடர்ந்து வந்திருக்கும் ஈழத்தில் ஓரளவு யுத்தம் ஓய்ந்திருக்கும் ஏன் நீங்கள் இறங்கிவரவில்லை???
தமிழக அரசைப்பற்றி உங்களுக்கு தெரியும் இதன் கையில் அகப்பட்ட தமிழகம் அன்றாடம் திண்டாடுகின்றது தமிழக அரசின் கபட நாடகத்தால் தமிழினமே அழிகின்றது இந்த தமிழக அரசை எதிர்த்து ஏன் பேசவில்லை?? காரணம் தமிழக அரசை எதிர்த்தால் சினிமாவில் வாய்ப்புக்கள் கிடைக்காது சண் தெலைக்காட்சிகளில் உங்கள் முகங்கள் தெரியாது இதுதான் உன்மை,
நீங்கள் இதுவரையில் சுயநலவாதி  இதை நீங்கள் மறுக்கமுடியாது .உங்களை நடிகனாக்கி பணமும் பதவியும் தந்த தமிழகத்துக்கு நீங்கள் இதுவரை செய்த நன்மை என்ன??? உங்களை ஊர்திகளில் அனுப்பிவிட்டு நடந்துவரும்உங்கள் செந்தங்களைப்பற்றிய வெறிப்பாடு என்ன ??நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?? கேள்ளிவி கேட்ப்பது என் உரிமை காரனம் உங்கள் வங்கிக்கனக்கில் இருக்கும் பணத்தில் என் பணமும் இருக்கின்றதுஇதை நீங்கள் மறுத்துவிட   முடியாது
நீங்கள் ஒரு சிறந்த நடிகன் என்பதை உங்கள் பரம்பரை சொல்லும் சிறந்த தமிழனாக வாழுங்கள் எங்கள் பரம்பரைகளும் உங்கள் பெயர் சொல்லும் .இந்திய அரசியலுக்கு படிப்பும் பட்டமும் தேவையில்லை நடிப்பும் நாட்டியமும் இருந்தால் போதும் இந்த உன்மையை செயற்பாட்டில் காட்டிக்கொண்டிருப்பவர் உங்கள் தமிழக முதல்வர் அவர்கள் அந்தவழி அரசியல் உங்களுக்கு வேண்டாம்
நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் நடிகனாக வரவேண்டாம் ஒரு தமிழனாக வாருங்கள் இரு கரம் நீட்டி வரவேற்போம்  ஆறு கோடி தலைகள் உலவும் தமிழகத்தில் தமிழனாக தெரிகின்ற தலைகள் வெறும் பத்து முதல் பதினைந்துதான் பதினாறாவதாய் உங்கள் தலையும் தெரியட்டும்  தலைப்பாகை சூடிவரவேற்க நாம் உள்ளேம் பழநெடுமாறன் அய்யாவை உதாரணமாக வைந்து தமிழனுக்காய் குரல் கெடுங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்போம்
அரசியல் என்பது சாக்கடை என்பார் சிலர்   அரசியல் என்பது ஒரு தீர்த்தக்கேணி அதில் அழுக்காணவர்கள் குளிப்பதனால் தான் அது சாக்கடையாக மாறிவிடுகின்றது அதில் நீங்களும் இறங்குவதாக இருந்தால் முதலில் உங்களை சுத்தப்படுத்தி விட்டு வாருங்கள் தயவு செய்து உங்களை வீரனாக்கி காட்டுவதற்கோ அல்லது மேலும் ரசிகர்களை திரட்டுவதற்காகவோ இந்த வீரவசனகள்போசுவதாக இருந்தால் அதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் .உன்மையிலே தமிழனாக வாழ ஆசைப்பட்டால் நடிப்பு நாடகம் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்து விட்டு உங்கள் கடமையினை செய்யுங்கள் எத்தனை தடை
வரினும் தோழோடு தோழ் கெடுக்க நாம் உள்ளோம் நீங்கள் இறங்கிவந்தால் உங்கள் பின்னால் நிற்கும் இளைய சமுதாயம்
விடிவுபெறும்  ,,,,,,,,,,,
தமிழன் என்று சொல்பவனெல்லாம் தமிழன் அல்ல
தமிழனாக வாழ்வோம் தமிழினத்தைக்காப்போம்

No comments:

Post a Comment