Sunday, April 3, 2011

இசைப்புயலும் இசை சக்கரவர்த்தியும் இணைகிறார்களா?

மணிரத்தினத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன்.இது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட உள்ளது.பட வேலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன ஆனால் மணிரத்தினம் தரப்பிலிருந்து எந்த விதமான உத்தியோக பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இப்பொழுது வந்த செய்தி எ.ஆர்.ரகுமானும் இளையரஜாவும் சேர்ந்து இப்ப்டத்திற்கு இசையமைகின்றனர் என்ற செய்தியாகும்.ஆரம்பத்திலேயே இச்செய்தி வெளிவந்தது ஆனால் அதன் பின் இச்செய்தி பொய்யானது எனத்தெரொய வந்தது ஆனால் இப்பொழுது மீண்டும் இச் செய்தி வெளிவந்ததால் சிலவேளை உண்மையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிலவரப்படி எ.ஆர்.ரகுமான் பொன்னியின் செல்வன் பாடல்களுக்கு இசையமைக்கிறார் எனவும் இளையராஜா பிண்ணணி இசையை அமைக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பாடலை ஒருவர் இசையமைப்பதும் மற்றவர் பிண்ணணி இசை வழங்குவதும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல.ஏற்கனவே இதற்கு பல சான்று உள்ளன.உதயா தசாவதாரம் திருப்பாச்சி எனப்பபல படங்கள் இவ்வாறு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.எனினும் இருவரும் இணை வது குறித்து எந்த விதமான உத்தீயோக பூர்வ செய்தி இதுவை வெளிவரவில்லை.உத்தியோக பூர்வ செய்தி வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment