பாடிகார்ட் ( தமிழில் விஜய் நடித்துள்ள காவலன்) படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை மேடையில் வழங்கியவர் விஜய். விழாவில் நயன்தாரா எதுவும் பேசவில்லை. பேசச் சொன்னபோது, நன்றி என்று மட்டும் கூறி இருக்கைக்குத் திரும்பினார். சிறந்த நடிகருக்கான ‘பாபுலர் விருது’ நடிகர் திலீபுக்கு வழங்கப்பட்டது. இவரும் பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதினைப் பெற்றார்.
இந்த விருது விழாவில் மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்பட பலரும் பங்கேற்றனர்.


No comments:
Post a Comment