நடிகர் விஜய்யின் மாமனார் மாமியார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். இலங்கை பிரச்சனையில் விஜய் குரல் கொடுக்காதது வெளிநாடு வாழ் தமிழ் மக்களை பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களது கோபத்தை தணிக்க நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டத்தை நடத்தினார். மேலும் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் சீமான் ஜெயலில் இருக்கும் போதே இப்படத்திற்கான திரைக்கதை அனைத்தும் முடித்து விட்டார். ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் இருந்த ஒருவரை விஜய் அடிக்கிறார். விஜய்யுடன் இருந்தவர் எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய் “அவன் என்னை அடிக்க நினைச்சான். அதான் அடிச்சேன் ” என்று சொல்கிறார். இது போன்று பல்வேறு தீப்பறக்கும் காட்சிகளை வைத்துள்ளாராம் சீமான். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் கேட்டவுடன் சீமானை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் இப்படத்தை உடனே ஆரம்பிக்க ஆசைப்பட்டு இருக்கிறார் விஜய்.
ஆனால் படம் ஆரம்பிக்க தாமதமாவதற்கு காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று முடிவாகாமல் இருப்பது தான். நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று இருப்பது சூப்பர் குட் பிலிம்ஸ். ஆனால் சீமானோ தாணுவிடம் இப்படத்தின் கதையை சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார், ஆகவே இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை யார் ஏற்க போகிறார்கள் என்பது மட்டும்தான் கேள்விக்குறி.
தமிழக தேர்தல் முடிந்தவுடன் இப்படத்தை ஆரம்பிக்கும் முனைப்புடன் இருக்கிறார்கள் சீமானும் விஜய்யும். அதற்குள் பகலவன் தயாரிப்பாளர் பிரச்சனை தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment