சீமான் – விஜய்
இருவரும் “பகலவன்” திரைப்படம் குறித்து பேசுவதற்கான சந்திப்பை மேற்கொண்டனர். பகலவன் படத்தின் முழு கதையையும் கேட்டு தனது அடுத்த படம் அதுதான் என்ற முடிவிற்கு இப்போது வந்துள்ளாராம் விஜய். இப்படத்தின் நடிகர்கள், டெக்னீசியன்கள் வரைக்கும் இருவரும் விவாதித்ததாக அறியவருகிறது.
தன்னை சந்தித்த சீமானிடம் எல்லாவற்றையும் பேசிய விஜய், கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தாராம். இந்த படத்தை ஆரம்பித்தால் இடைவெளி இல்லாமல் முடித்து தரவேண்டும்;. அதற்கு நீங்கள் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதையும் பேசக் கூடாது. மீண்டும் சிறைக்கு போகின்ற நிலைமையும் வரக் கூடாது என்றாராம்.
அவரது நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறாராம் சீமானும்! |
No comments:
Post a Comment