
விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று (மார்ச் 27) அதிமுக தலைவர் ஜெ.ஜெயலலிதாவை திருச்சியில் சந்தித்து பேசினார். ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில், விஜய் மக்கள் இயக்கும் அதிமுக விற்கு ஆதரவு கொடுப்பது, விஜய் ரசிகர்கள் அதிமுக வின் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என்று ஜெயலலைதாவிடம் எஸ்.ஏ.சி உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
விஜய் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தரப்போகிறதா?
ஆமாம், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கம் பாடுபடப் போகிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்காகவும், டாக்டர் ஜெ.ஜெயலலிதாவை முதல்வராக்கவும் மக்கள் இயக்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பணியாற்ற இருக்கிறார்கள்.
நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவீர்களா?
தமிழ்நாடு முழுக்க அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறேன்.
திமுக அனுதாபியாக இருந்த நீங்கள் இப்படி அதிரடி முடிவெடுக்க காரணம் என்ன?
நான் திமுக அனுதாபி அல்ல. நான் எந்த கட்சியிலும் உறுப்பினரும் அல்ல. நான் இயக்கிய நீதிக்கு தண்டனை, சட்டம் ஒரு இருட்டறை, நீதியின் மறுபக்கம் போன்ற படங்களுக்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுதியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட பரிச்சயத்தால் இன்னும் கலைஞரில் எழுத்துக்களை மதிக்கிறேன். ஆனால் இப்போது இருக்கும் அரசியல், சமூக சூழ்நிலைகள் வேறு. தவறுகள், அராஜகம், ஊழல் தலைதூக்கி இருக்கிறது. அதனால் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக மக்கள் இயக்கம் பணியாற்றப் போகிறது.
சட்டப்படி குற்றம் படத்தை வெளிவராமல் செய்ய திரைமறைவு முயற்சிகள் நடந்தன. அதன் பின்னணி என்ன?
சட்டப்படி குற்றம் படம் வெளிவந்தால் ஒரு மாற்றம் வந்துவிடும் என்று பயந்து சிலர் அதைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். சட்ட மன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தேதல் கமிஷனிடம் புகார் அளித்தார். சம்மந்தமே இல்லாமல் ரஃபிக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தயாரிப்பாளர்களுகென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. படத்தை திரையில சென்சார் போர்டு அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தும் படத்தை தடுத்திட பல்வேறு வழிகளில் முயன்றார்கள். இறுதியில் தடைகளை உடைத்து படம் 170 சென்டர்களில் வெளியாகி மக்கள் பேராதரவுடன் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி.
விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா?
அவர் தன் முடிவை விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
No comments:
Post a Comment