Monday, April 11, 2011

அமைதி காக்கும் விஜய், அடங்கிப்போன சரத், ஆர்ப்பரிக்கும் விஜயகாந்த்


இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்களின் முகவரி, திராவிட கட்சிகளுடனான தொடர்பு என சரத்திற்கு எப்போதும் செல்வாக்கு அதிகம். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு. காமராசர் ஆட்சி எனும் கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி சாதி சங்கமாக சுருங்கிபோனதன் விளைவு தான் இரண்டு தொகுதி மட்டும் என திருப்தி பட வேண்டியதாகிவிட்டது. சினிமா அரசியல்வாதிகளில் கொஞ்சமாவது தெளிவாக பேசுவது தான் இவரது பலம். ஆனால் சபைக்கு வரவிடாமல் சாதி சங்க ஆட்கள் காலைவாரி விடுவது பலவீனம்.


தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும். தென்காசி பிரசாரத்தின் போது சரத்தின் பெயரை உச்சரிக்காமல் விட்டதில் எந்த உள்குத்தும் இல்லையாம். பெயர் விடுபட்டுவிட்டது யதார்த்தமாக நடந்தது தான். பின்பு மறக்காமல் சரத்தின் பெயரையும் சொல்லி ஒட்டு போடா சொன்னது சரத்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிகமாக எந்த தொகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லாத சரத், ஸ்ரீரங்கம் மட்டும் செல்ல போகிறார்.
தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான். என்னாதான் இன்று காட்சி மாறிவிட்டாலும் ராதிகாவிற்கு கலைஞர் மேல் பாசம் அதிகம், அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய யோசிக்கிறார்



தேர்தல் கூட்டணிக்கு முன்பே அம்மாவை துணிச்சலுடன் சந்தித்தவர் விஜய். ஏதோ நடக்கபோகிறது என்று நினைபதற்குள்ளாகவே விழுந்தது முதல் அடி. காவலன் படத்தை திரையிட விடாமல் சதி செய்தனர் ஆளுங்கட்சி புள்ளிகள். படாத பாடு பட்டுதான் படத்தை ரிலீசே செய்தார்கள். அப்படியும் சன், கலைஞர் விளம்பரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பயம் காட்டினால் படிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் போயஸ் பக்கம் போனதும் உஷாரான தி மு க கோஷ்டி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் விஜய் அ தி மு காவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தெரிந்ததும், ஆடிப்போன ஆளுங்கட்சி தரப்பு சாம தான பேத தண்டங்களை பிரயோகித்து தடுக்க முயற்சி செய்தது. வழக்கம் போல் விஜய் பின் வாங்க ஆரம்பித்தும் சூடான சந்திர சேகர் தனியாகவே களம் இறங்கிவிட்டார். சந்திர சேகர் சூடானதற்கு சட்டபடி குற்றம் என்ற அவரின் படத்திற்கும் பஞ்சாயத்து பண்ணவேண்டி வந்ததால் தான்.

கட்சியில் சேரபோகிறார், பிரச்சாரம் செய்யபோகிறார், என்றெல்லாம் கசிந்த நிலையில் இன்று வெறும் அறிக்கை மட்டும் விடுவார் என்கிறார்கள். அம்மா தரப்பு அறிக்கை மட்டும் போதாது ஜெய டிவியில் தோன்றி அ தி மு க கூட்டணிக்கு அதரவு என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். ஆனால் அடக்கி வாசித்தால் பெறப்போகும் பல நன்மைகளை பட்டியலிட்டிருகிறது தி மு க தரப்பு. (இழந்த பெட்டிகளை திருப்பி தருவதாகவும் பேச்சு)



ஒட்டுமொத்த ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்களும் கேப்டனை குறிவைத்து தாக்குவதற்கு காரணம் ஒன்றே ஓன்று தான் அது இந்த தேர்தலில் தி மு க கூட்டணி தோல்வி அடைந்தால் காரணம் தே தி மு காவின் ஒட்டு வங்கி அ தி மு காவை சேர இருப்பது தான். தே மு தி க 41 தொகுதிகளில் போட்டியிட்டு 5 அல்லது 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அ தி மு க போட்டியிடும் 160 தொகுதிகளிலும் தே மு தி காவின் ஓட்டுக்களால் ஆதாயம் அடைய போகிறது. கேப்டனின் இமேஜை காலி செய்ய என்ன என்ன சாக்கு கிடைத்தாலும் போட்டு தாக்கிறது. வடிவேலுவை கூட்டி வந்ததும் அதற்காக தான். ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவராகவே பேசிய வடிவேலு எதிர்கோஷ்டி சிங்கமுத்துவை இறக்கி விட்டதும் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தான். வடிவேலுவின் மொத்த குடுமியும் சிங்கமுத்துவிடம் இருக்கிறது.

புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது. வடிவேலு பேசும் இடங்களில் கூட்டம் சேர்வது உண்மை. ஆனால் அவரின் பேச்சில் தி மு காவை தூக்கி பிடிக்கும் அளவிற்கு வலுவில்லை. கொஞ்சம் உற்று நோக்கினால் மேடை தோறும் அவர் பாடும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள். கருணாநிதியின் உற்ற நண்பர் எம் ஜி ஆர் என்று வேறு சொல்லிகொள்கிறார். வெறும் ஒரு ரூபா அரிசி, இலவச மிகஷி, கிரைண்டர், அவசர உதவிக்கு 108 என்பதை தவிர வேறு ஒன்றையும் காணோம். ஏற்கனவே இந்த எல்லா திட்டங்களில் உள்ள ஓட்டையை பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்து விட்டார்கள் அம்மாவும், பாண்டியனும், சீமானும்.

விஜயகாந்தின் சினிமா இமேஜையும் காலி பண்ண முடியாமல், அரசியல் இமேஜையும் காலி பண்ண முடியாமல் கையை பிசைகிறது தி மு க அணி. என்ன வேணா சொல்லிக்கோ என்று தில்லாக தொகுதிகளை வலம் வருகிறார் கேப்டன். ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு வயிறு எரிகிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று சொல்லிகொண்டாலும் பொறுமை, அமைதி, நிதானமாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பது என்பதெல்லாம் கேப்டனிடம் இல்லை. இருக்கும் குறைகள் தெரிந்து அதை களைய வேண்டும். இல்லாமலல்லாம் சித்திக்காது முதல்வர் கனவு.


(ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா..)

No comments:

Post a Comment