Sunday, April 10, 2011

விஜய்க்காக சம்பளத்தை குறைத்த அசின் - புதுத்தகவல்



Asin reduces her salary for Vijay
நடிகர் விஜய்யுடன் ஜோடி போடுவதற்காக நடிகை அசின் தனது சம்பளத்தில் ஒன்றரை கோடியை குறைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. போக்கிரி படத்தில் விஜய் - அசின் ஜோடியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அசின் பாலிவுட் பக்கம் போய் விட்டதால் மீண்டும் இந்த ஜோடி, ஜோடியாக நடித்து திரையில் தோன்ற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்த அசினுக்கு விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தி படவுலகில் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கிய அசின், விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு என்பதால் தனது சம்பளத்தை ரூ.ஒன்றரை கோடியாக குறைத்துள்ளாராம்.

No comments:

Post a Comment