| இந்தி 'த்ரீ இடியட்சின்' தமிழ் ரீமேக்கான 'நண்பன்' படத்தின் சூட்டிங் டேராடூனில் நடந்தது. |
| கட்டி முடித்து, நூற்றாண்டை தொடும் ஃபாரஸ்ட் ரிசர்வ் இன்ஸ்டிடியுட் வீடுகள் உள்ள ஏரியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். அந்த சூழலே லண்டனில் இருப்பதை போல ரம்யமாக இருக்கும். இயற்கை வனப்பும் நெஞ்சையள்ளும் என்கிறார்கள். இந்த லொகேசனின் குளுமையில் மனதை பறிகொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். கதைப்படி காலேஜ் படிக்கும் இளசாக வர கண்டிப்பாக 'வெயிட்டை' குறைக்கணும் என்று உத்தரவு போட்டார் டைரகடர் ஷங்கர் சார். தொடர்ந்து சாப்பாட்டை குறைச்சு, ஜிம்மில் வியர்வை வழிய விளையாடி உடம்பு எடையை படத்துக்காக குறைச்சிருக்கேன். ஸ்பாட்டில் டல்லாக தெரிந்தால் அடுத்த நிமிடமே உற்சாகப்படுத்துவார். அவரோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் என்னை வியக்க வைத்தது விஜய், ஜீவா, சத்யராஜ் இப்படி பட டீம் உடன் இணைந்து வொர்க் பண்றதை 'எனர்ஜெடிக்கா' பீல் பண்றேன். நண்பன் பட செட்டில் பிறந்த நாளை கொண்டாடியதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இதே நாளில் என் செல்ல மகனின் பர்த் டே'யை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்து சோகமானதுண்டு. கோலிவுட் சினிமா லைப்பில் ஷங்கர் சார் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். ஹாரிஸ் இசையில், ஷோபி நடன அமைப்பில், மனோஜ் ஒளிப்பதிவில் 'நண்பன்' படம் ஷங்கர் ஸ்டைல் படமாக உருவாக்கி வருகிறது என்கிறார் ஸ்ரீகாந்த். |
Sunday, April 3, 2011
ஸ்ரீகாந்துக்கு டைரக்டர் ஷங்கர் கண்டிஷன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment