Sunday, April 3, 2011

எந்திரன் டூ நண்பன் - சிலாகிக்கும் ஷங்கர்


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் இலியானா நடித்து வரும் திரைப்படம் நண்பன். இதனை ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெகராடூனில் நடைபெற்று வந்தது.இது குறித்து இயக்குனர் ஷங்கர் தனது வலைதளத்தில் "படத்திற்க்காக காலேஜுக்கு வெளியே எடுக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் டெகராடூனில் எடுத்து முடித்து விட்டேன். விஜய், சத்யராஜ் மற்றும் இலியானா ஆகியோரிடம் வேலை பார்த்தது புதுவிதமாகவும், உற்சாகமாகவும் உள்ளது. விஜய் - சத்யராஜ் இணை புதிதாகவும் அற்புதமாகவும் உள்ளது. விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நண்பர்களுக்கிடையே பிஸிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி கேமராவிற்கு முன்பும் பின்பும் நன்றாகவே இருக்கிறது.  அனைவரும் அந்த கேரக்டர்களாகவே வாழ ஆரம்பித்து விட்டார்கள்.  எந்திரன் திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட நண்பன் படத்தை இயக்குவது சந்தோஷமாக இருக்கிறது."  என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment