Sunday, April 3, 2011

மைசூ‌ரில் பொன்னியின் செல்வன்


பொன்னியின் செல்வன் படத்தில் அதி தீவிரமாக இருக்கிறார் மணிரத்னம். வந்தியதேவனாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக மைசூர் அரண்மனை தயாராகி வருகிறது.

பொன்னியின் செல்வன் கதைக்கு பிரமாண்ட அரண்மனைகள் தேவை. மைசூர் அரண்மனையில் அரண்மனைக் காட்சிகள் பெரும்பாலானவற்றை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். அங்கு படப்பிடிப்பு நடத்தவும், சில மாற்றங்களை செய்து கொள்ளவும் முறைப்படி அனுமதியும் வாங்கியுள்ளாராம்.

ராஜராஜ சோழனாக ஆர்யாவும், குந்தவை பிராட்டியாக அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். கதைப்படி வந்தியதேவனின் காதலியாக வருகிறார் குந்தவை. அதாவது அனுஷ்கா விஜய்யின் ஜோடி.

No comments:

Post a Comment