மணிரத்னம் இயக்கும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், இந்தியாவின் மிக அழகிய அரண்மனைகளில் ஒன்றான லலிதமஹாலில் படமாகிறது.
இதற்காக இருதினங்களுக்கு முன் மைசூருக்கு வந்த இயக்குநர் மணி ரத்னம், மஹாலையும் சுற்றுப் புறங்களில் உள்ள மைசூர் மற்றும் பெங்களூர் அரண்மனைகளாயும் பார்வையிட்டார்.
தமிழ் மன்னர்களில் தன்னிகரற்றவனாகத் திகழ்பவன் சோழர் குலத் தோன்றல், புலிக்கொடியை உலகெங்கும் பறக்க விட்ட ராஜராஜ சோழன். அவனது ஆட்சி மற்றும் அது அமையும் முன்நடந்த அரசியல் சதிகள் போன்றவற்றை மிகச் சிறந்த நாவலாக உருவாக்கினார் கல்கி.
பொதுவாக இந்த மாதிரி சரித்திர கதைகள் 90 சதவீதம் கற்பனையாக இருக்கும். ஆனால் கல்கியோ, முழுக்க முழுக்க சரித்திர உண்மைகளின் அடிப்படையில் 90 சதவீத ஆதாரங்களுடன் இந்தக் கதையைப் புனைந்திருந்தார். எனவே இடைக்கால சோழ சரித்திரமாகவே பார்க்கப்படுகிறது தமிழ் இலக்கியத்தில்.
இத்தனை சிறப்பு மிக்க கதையை, 'டெலிகிராப்' தமிழுக்குச் சொந்தக்காரரான மணிரத்னம் படமாக எடுப்பதாக அறிவித்ததும், தினமும் ஒரு செய்தியாக படம் குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.
தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.
கதாநாயகனாக விஜய், நடிக்கிறார். பொன்னியின் செல்வனின் ஜீவநாடியான பாத்திரம் எனப்படும் வல்லவரையன் வந்தியத் தேவனாக நடிக்கிறார் அவர்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோழமன்னன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதில் நான் நடிக்கிறேன் என்று தானாக முன்வந்து கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா என்கிறார்கள். சூர்யாவுக்கும் விக்ரமுக்கான பனிப்போரில் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை செட் அமைக்கும் யோசனையும் உள்ளதாம் ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலுக்கு.

No comments:
Post a Comment