நான் நடித்த மாப்பிள்ளை எங்கேயும் காதல் வேலாயுதம் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய நான்கு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படமாக அமைந்தது எனது கரெக்டரை நல்ல மாதிரி செய்ய உதவி புரிந்தது எனலாம்.மாப்பிள்ளையில் மொடேன் மற்றும் குடும்பபாங்கான பெண்ணாக வருகின்றேன்.எங்கேயும் காதலில் வெளிநாட்டு மொடேன் பொண்ணாக வருகின்றேன்.வேலாயுதம் படத்தில் முழுமையான கிராமத்துப்பெண்ணாக வருகின்றேன்.வேலாயுதம் படத்தில் என்னைப்பார்த்திட்டு நீங்களே உங்கவீட்டு பொண்ணென்று சொல்லிவீர்கள் பாருங்கள்.ஒரு கல் ஒரு கண்ணாடியில் நகரத்து பெண்ணாக வருகின்றேன்.
விஜய் சேருடன் ஜோடி சேர்ந்தது எனக்கு கிடைத்த அதிஸ்டம்.அதுவும் எனது மூன்றாவது படத்தில் கிடைத்தது சந்தோசம்.விஜய் சேருடன் பழகிய அனுபவம் மறக்கமுடியாதவை.வேலாயுதம் படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல் பழகினோம்.கதைக்குள் பலர் வருவதால் வித்தியாகமாக இருந்தது.படத்தில் இரு நாயகி என்றாலும் நானும் ஜெலியா சரண்யா மூவரும் எந்த வித ஈகோ இல்லாமல் படப்பிடிப்பில் இருந்தோம்.இப்படவாய்பை தந்த ராஜா சேர் ரவிசந்திரன் சேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:
Post a Comment