Thursday, July 28, 2011

வந்தது ரசிகர்களா, கட்சி தொண்டர்களா? யூகிக்க முடியாத குழப்பத்தில் விஜய்


கட்சிக்கும் ரசிகர் மன்றத்துக்கும் இருக்கிற வித்தியாசம் கொடி, கொள்கைகள் மட்டுமல்ல, தலைவர் சொல் கேட்டு அடங்கி நடக்கிற விஷயத்திலும்தான். ஆனால்,Ramoji Film Cityவிஜய் கலந்து கொண்ட படப்பிடிப்பில் அவருடைய சொல்லை கேட்காமல் உள்ளே புகுந்த ரசிகர்கள் நிஜமாகவே ரசிகர்கள்தானா? அல்லது வேறொரு தலைவரை வணங்கும் தொண்டர்களா? என்ற சந்தேகம் வந்திருக்கிறதாம் விஜய் தரப்பினருக்கு.
கடந்த சில தினங்களுக்கு சென்னை புறநகரில் ஒரு இடத்தில் நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பொதுவாகவே விஜய் கலந்து கொள்கிற படப்பிடிப்புக்கு வருகிற ரசிகர்கள், அவரை பார்க்கும் ஆசையில் திரண்டு நிற்பார்கள். ஆனால், அவரை நெருங்க முடியாதபடி காவல் காத்து நிற்பார்கள் அவரது பாடி கார்டுகளும், படப்பிடிப்புக் குழுவினரும்.
அப்படிதான் இருந்தார்கள் சம்பவ தினத்தன்றும். ஆனாலும், திமுதிமுவென்று பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விட்டு உள்ளே புகுந்தது ஒரு கும்பல். வந்தவர்கள் லொகேஷனில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் வந்தவர்கள் ரசிகர்கள்தானா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
இதன்பின் இன்னும் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி.

No comments:

Post a Comment