Thursday, July 14, 2011

அஜீத்துக்கு எத்தனை? விஜய்க்கு எத்தனை? -ஒரு புள்ளிவிபர குழப்பம்

தீவிர அஜீத் ரசிகர்களும் புள்ளி விபரப் புலிகளும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வுAjith - Vijayசொல்லலாம். ஒரு தெலுங்கு படம், ஒரு இந்திப்படத்துடன் இதுவரை அஜீத் நடித்த படங்களின் எண்ணிக்கை 49 என்கிறார்கள் சில சினிமா விபர சேகரிப்பாளர்கள். ஆனால் மங்காத்தா அவரது 50 வது படம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள் அப்படக் குழுவினர். சொக்கா... இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடேன்ப்பா என்று புள்ளி விபர பார்ட்டிகளே குழம்பி போயிருக்கிறார்கள்.
இதே போல இன்னொரு பிரச்சனையால் சிக்கி தவிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். சமீபத்தில் வந்த அவரது பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்த ரசிகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அடித்தார்களாம். அவரவர் சவுகர்யத்திற்கேற்ப 38 என்றும் 40 என்றும் 41 என்றும் அடித்து தள்ளியிருக்கிறார்கள்.
ஆனால் விஜய் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்ட இந்த வருடத்தின் அதிகாரபூர்வ வயது 38 மட்டும்தான்.
கேட்பதற்கு அல்ஜிப்ரா மாதிரி இருந்தாலும் இவ்விரு ஸ்டார்களின் ரசிகர்களுக்கு இது எனர்ஜிப்ராவாச்சே?

No comments:

Post a Comment