Tuesday, July 26, 2011

விஜய் சொக்கவைக்க... நமீதா கோபம்கொள்ள... : சோனா ராக்ஸ்


கோடம்பாக்கத்தின் கொஞ்சல் கிளி சோனாவின் யுனிக் கலெக்ஷன்ஸ். ''ஒரு இன்ட்ரஸ்ட்டிங் போட்டோ காட்டவா?'' என ஆப்பிள் மேக்கில் தேடி எடுத்துக் காட்டுகிறார். மல்லிப் பூ வைத்து, சேலை கட்டி புகைப்படத்தில் சிரிக்கிறார் 'அடக்க ஒடுக்க’ சோனா. ''நாங்க இப்படியும் டிரெஸ் பண்ணுவோம்ல... எல்லாம் ஊரை ஏமாத்தத்தான்!'' - கண் சிமிட்டிச் சிரிக்கும் சோனாவுடன் இதோ ஒரு ஓப்பன் டாக்!
'' 'பாக்யராஜ் 2010’-னு ஒரு படத்துக்கு பூஜை போட்டீங்க. 2011 வருஷமே பாதி கடந்தாச்சு. எப்போ வருவார் பாக்யராஜ்?''
''60 சதவிகிதம் ஷூட்டிங் ஓவர். 'மங்காத்தா’ படத்தில் பிரேம்ஜி அமரன் பிஸி ஆகிட்டதால், ஷூட்டிங் நடத்த முடியலை. இப்போ சார் ஃப்ரீ ஆகிட்டார். அடுத்த வாரத்தில் இருந்து ஷூட்டிங் ஆரம்பம். படத்தோட டைட்டிலைச் சொன்னவுடனே, பாக்யராஜ் 2010-னு தலைப்பு வெச்சிருக்கே. படம் 2010-ல ரிலீஸ் ஆகாதும்மா. உனக்கு சினிமாபத்தி தெரியலை’னு கங்கை அமரன் சொன்னார். அப்போ நான் நம்பலை. இப்போ நம்புறேன். பாக்யராஜ் ஒரு வருஷம் லேட்டா வர்றாருப்பா!''
''விஜய் மக்கள் இயக்கத்துல சேரப்போறேன்னு சொன்னீங்களே ஏன்?''
''நான் ஏன் சேரணும்? ஏன்னா, ஏற்கெனவே நான் அதுலதான் இருக்கேன். நாம அவருக்காக எப்பவும் நிப்பம்ல!''
''ஏன் உங்களுக்கு விஜய் பிடிக்கும்?''
''அவர் கண்ணு சூப்பருங்க. சில பேரைப் பார்த்தா சொக்கி இழுக்கும்னு சொல்வாங்களே... அவர் அப்படி ஒரு கேரக்டர்!''
'' 'கோ’ படத்தில் நமீதாவை இமிடேட் பண்ணி இருந்தீங்களே... அவங்ககிட்ட இருந்து ஏதாவது ரியாக்ஷன் வந்துச்சா?''
''படம் ரிலீஸ் ஆனதும் இதே மாதிரி நிறையப் பேர் என்கிட்ட சொன்னாங்க. 'ஏதாவது கோபத்துல இருக்காங்களா?’னு தெரிஞ்சுக்க நமீதாவுக்கு போன் பண்ணினேன். போன் எடுக்கலை.' 'கோ’ படத்துல நான் உங்களை இமிடேட் பண்ணி இருந் தேன். உங்களுக்கு ஒண்ணும் கோபம் இல்லையே?’னு மெசேஜ் அனுப்பினேன். 'இட்ஸ் ஓ.கே... டோன்ட் கால் மீ அகெய்ன்’னு ரிப்ளை வந்தது. ஓ.கே. மச்சான் கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சதும், அப்படியே சைலன்ட் ஆகிட்டேன்!''
''நமீதா எல்லாருக்கும் மார்க் போடுறாங்க... நீங்க நமீதாவுக்கு மார்க் போடுவீங்களா?''
''முதல் அஞ்சு படத்துல அவங்களை மாதிரி சூப்பர் ஃபிகரை தமிழ் சினிமா பார்த்ததே இல்லை. முகம், உயரம், ஸ்ட்ரெக்சர் எல்லாமே பக்காவா இருந்துச்சு. இப்போ வெயிட் போட்டதுதான் பிராப்ளம். உடம்பை ஃபிட்டா வெச்சு இருந்தா இப்பவும் சூப்பர் ஃபிகர் அவங்கதான்!''
''அரசியல்ல ஈடுபட்டு சி.எம். ஆகும் ஐடியா இருக்குதா?''
''எனக்கு இப்போ ரொம்ப சின்ன வயசுதான். இன்னும் நிறையப் படங் கள் நடிச்சு முடிச்சுட்டு, அரசியலுக்கு வருவேன். ரசிகர்களே... உங்களை இப்போ நான் சந்தோஷப்படுத்துற மாதிரி, அப்போ ஓட்டு போட்டு என்னை நீங்க சந்தோஷப்படுத்துங்க!''
ஹை... (குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்) என்னைப் பார்த்தா, கேனையாத் தெரியுதா? (உதடு சுழித்து) 17 இல்லே 18னு போட்டுக்கோங்க!''
''சொல்லுங்க... உங்களுக்கு எவ்ளோ சின்ன வயசுனு தெரிஞ்சுக்கிறோம்?''
'' 'ஆண்களோடு வாழ முடியாது... ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது’ - இந்தத் தத்துவத்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யாரு?''
''அனுபவம்தான்... இதுவரைக்கும் சீரியஸா ரெண்டு காதல் பண்ணினேன். ஒருத்தனை எவ்ளோ வேணும் வேணும்னு தோணுச்சோ, அந்த அளவுக்கு வேணாம் வேணாம்னு வெறுத்துட்டேன். இன்னொருத் தர், இப்போ கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டார். அவர் ஒரு தமிழ் சினிமா செலிபிரட்டி. இதுக்கு மேல எல்லாமே சீக்ரெட்

No comments:

Post a Comment