Tuesday, July 19, 2011

இதுதான் எங்களுக்கு பெருமை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி பேச்சு

ரௌத்திரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது. தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அல்லவா? அவருக்காகவே திரண்டிருந்தது கோடம்பாக்கம். அதில் பாதி பேரை மேடையில் ஏற்றியதால் ஆடியன்சுக்கு மூச்சு வாங்கியது. ஆச்சயர்மாக முழங்காலை கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் முழுக்க மூடியபடி வந்திருந்தார் கதாநாயகி ஸ்ரேயா. (பிளாஷ் சப்தம் கேட்க வேண்டிய கேமிராக்களில் எல்லாம் ஒரே இருமல் சப்தம்)
முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரில் பாலிவுட் ஃபேமஸ் நடன இயக்குனரானRowthiram Audio Launchகணேஷ் ஆச்சார்யா ஆக்ரோஷம் காட்டினார். அவர்தான் இப்படத்தின் வில்லனாம். ராம்கோபால் வர்மா அழைத்தபோதே நடிக்க மறுத்துவிட்டவர், நாங்க அழைச்சதும் நடிக்க வந்தார். ஏனென்றால் கதை அப்படி என்றார் ஆர்.பி.சவுத்ரி. மூன்று பாடல்களையும் திரையிட்டார்கள். பிரகாஷ் நிக்கி என்ற புதியவர்தான் இசையமைப்பாளர். ஆள்தான் கொஞ்சம் ஸ்லோ. பாட்டெல்லாம் பிரமாதம் என்று சவுத்ரி சர்டிபிகேட் கொடுத்தார்.
பொதுவாக பாடல் வெளியீட்டு விழாவில் புதிய புதிக சர்ச்சைகளை கிளப்பும் பிரபலங்கள் யாரும் வரவில்லை. இருந்தாலும் அந்த பணியை ஏற்றுக் கொண்டார்Rowthiram Audio Launchகே.எஸ்.ரவிகுமார். இப்போதெல்லாம் திருட்டு விசிடி வந்திருது. அதனால் படம் வெளியாகிற தினத்தன்றே விசிடி ரைட்ஸ் கொடுத்தால் கொஞ்சமாவது அதிலேர்ந்து பணம் ரிட்டர்ன் வரும். ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிட்டார்னா அதை செய்யணும் என்றார். மேடையிலேயே இருந்த தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதற்கு பதில் சொல்வார் என எதிர்பார்த்தால் சப்!
சர்ச்சைக்குள் போகாமல் சேஃப்ட்டியாக பேசி எஸ்கேப் ஆனார். என்னை எஸ்.ஏ.சந்திரசேகர்னு அழைச்ச காலம் போய், விஜய்யோட அப்பான்னு சொல்றாங்க. அதே மாதிரிதான் சவுத்ரியையும் ஜீவாவோட அப்பான்னு சொல்றாங்க. இதுதான் எங்களுக்கு பெருமையா இருக்கு என்றார்.
கோ மாதிரியே இந்த படமும் ஹிட் ஆகும் என்று அத்தனை பேரும் வாழ்த்தினார்கள். ஆமாம்... ஏன் கே.வி.ஆனந்த் வரலே?

No comments:

Post a Comment