Friday, July 8, 2011

ஜெயலலிதாவை எதிர்க்கப்போகிறாரா விஜய்?

vijay-vijay-makkal-iyakkam-07-07-11
விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் "விஜய் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு படத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார் ஆகவே அவரின் அரசியல் பணிகளை நான் கவனித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வார்டில் உள்ள மக்கள் தொகையில் பாதியளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் அப்படி சேர்ப்பவர்கள் உறுப்பினர்களை கூட்டிக்கொண்டு சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். அப்படி செய்பவர்களுக்கு நான் உள்ளாட்சி தேர்தலில் சீட் வாங்கி கொடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

"விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் நான் கவுன்சிலர் ஆனேன், சட்டசபை உறுப்பினர் ஆனேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும்" என்றும் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பதவிகளை பிடிக்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' குதிக்கப் போவது உறுதியாகி விட்டது. அப்படியென்றால் அஇஅதிமுக மற்றும் திமுக கட்சிகளை எதிர்த்து நிற்க போகிறார்களா? முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக களமிறக்க போகிறாரா விஜய் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

No comments:

Post a Comment